நட்பா? காதலா?
நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்
நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்
நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்
என்னை நானாக பார்த்தது
நட்பு தான்
காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்
எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.
... சஞ்சு
நான் உன்னை
காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னை
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது!!!
நன்றி:தபூ ஷங்கர்
ஆசை 6௦ நாள் என்று யார் சொன்னது,
எத்தனை எத்தனை
60 நாட்களையும் தாண்டி
இன்னும் என்
ஆசையாகவே இருக்கிறாயே நீ ......!
நன்றி:தபூ ஷங்கர்